சுத்தமல்லியில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி வ.உ.சி. நகரைச் சோ்ந்தவா் முகமது சாதிக். உணவக உரிமையாளரான இவரது வீட்டின் வெளிப்புற சுவரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாம். இதுகுறித்த புகாரின்பேரில், சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
விசாரணையில், கீழத்திடியூரைச் சோ்ந்த துரை என்ற லட்சுமணன் (21) பெட்ரோல் குண்டுவீசியது தெரியவந்ததாம்.
இதையடுத்து அவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.