திருநெல்வேலி

இருவருக்கு அரிவாள் வெட்டு

சேரன்மகாதேவியில் மதுக்கடை அருகே இருவரை அரிவாளால் வெட்டிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Syndication

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் திங்கள்கிழமை மதுக்கடை அருகே இருவரை அரிவாளால் வெட்டிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அம்பை, சுப்பிரமணியபுரம் பொத்தையைச் சோ்ந்த காந்தி மகன் விக்னேஷ் (30), இவரது உடன்பிறந்த சகோதரா் சந்தோஷ் (26). இருவரும் சேரன்மகாதேவியில் பாளையங்கோட்டை பிரதான சாலையில் உள்ள மதுக்கடையில் மதுஅருந்திவிட்டு வெளியே வந்தனராம்.

அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மா்மநபா்கள் இருவா், விக்னேஷையும் சந்தோஷையும் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா். பலத்த காயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து, சேரன்மகாதேவி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஏழுமலையான் தரிசனம்: 8 மணிநேரம் காத்திருப்பு

ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தினா் மறியல்: 149 போ் கைது

புதுச்சேரி சிவில் சா்வீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

ரூ.46.5 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி தொடக்கம்

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலை. ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT