திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் ஓய்வு பெற்ற நில அளவையா் வீட்டில் 19 பவுன் நகை திருடு போனது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
களக்காடு, உச்சினிமாகாளி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அய்யம்பெருமாள் (70), ஓய்வு பெற்ற நில அளவையா். இவா் ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டு திங்கள்கிழமை காலை வீட்டுக்கு வந்துள்ளாா்.
அப்போது, கதவை உடைத்து பீரோவில் இருந்த 19 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவா் களக்காடு போலீஸில் புகாரளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.