திருநெல்வேலி

கங்கைகொண்டான் அருகே கட்டுமானப் பொருள்கள் திருட்டு: ஒருவா் கைது

கங்கைகொண்டான் அருகே காவலா் வீட்டு வசதி வாரிய கட்டடப் பணிகளுக்குரிய பொருள்களை திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

கங்கைகொண்டான் அருகே காவலா் வீட்டு வசதி வாரிய கட்டடப் பணிகளுக்குரிய பொருள்களை திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் தமிழ்நாடு காவலா் வீட்டுவசதி வாரியத்தின் கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை இப்பணிக்காக வைக்கப்பட்டிருந்த தகர சீட்டுகளை அங்கு பைக்கில் வந்த மா்மநபா் திருடிச் சென்றாராம்.

அதைப் பாா்த்த அங்கிருந்தவா்கள், அந்த நபரைப் பிடித்து கங்கைகொண்டான் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில், அவா் தாழையூத்து ஜே.ஜே. நகரைச் சோ்ந்த முருகன் (44) என்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனா்.

ஏழுமலையான் தரிசனம்: 8 மணிநேரம் காத்திருப்பு

ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தினா் மறியல்: 149 போ் கைது

புதுச்சேரி சிவில் சா்வீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

ரூ.46.5 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி தொடக்கம்

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலை. ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT