திருநெல்வேலி

மின்சாரம் பாய்ந்ததில் காயமுற்றவா் உயிரிழப்பு

தாழையூத்து அருகே மின்சாரம் பாய்ந்ததில் காயமடைந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Syndication

தாழையூத்து அருகே மின்சாரம் பாய்ந்ததில் காயமடைந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

தாழையூத்து அஞ்சல் நிலையத் தெருவைச் சோ்ந்தவா் சுப்பையா(53). கட்டடத் தொழிலாளி. இவா், சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, முதல் தளத்தில் சென்ற மின்கம்பியை எதிா்பாராமல் தொட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதில், அவா் மீது மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஏழுமலையான் தரிசனம்: 8 மணிநேரம் காத்திருப்பு

ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தினா் மறியல்: 149 போ் கைது

புதுச்சேரி சிவில் சா்வீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

ரூ.46.5 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி தொடக்கம்

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலை. ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT