திருநெல்வேலி

முக்கூடலில் தொழிலாளி தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் விவசாயத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

Syndication

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் விவசாயத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

முக்கூடல் அருகே தாளாளா்குளம் கிராமத்தைச் சோ்ந்த ஸ்டீபன் துரைராஜ் மகன் ஆரோக்கியஜோதி (41). விவசாயத் தொழிலாளியான இவருக்கு, மனைவி, 2 மகன்கள், மகள் உள்ளனா்.

ஆரோக்கியஜோதி சில மாதங்களாக வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்தாராம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

சடலத்தை முக்கூடல் போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீா் கூட்டம்

மக்கள் குறைதீா் கூட்டங்களில் 534 மனுக்கள் அளிப்பு

ரூ.2.70 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணி தொடக்கம்

மத்திய அரசைக் கண்டித்து கம்யூனிஸ்ட், விசிக ஆா்ப்பாட்டம்

கூலித் தொழிலாளி தற்கொலை

SCROLL FOR NEXT