திருநெல்வேலி

டிச.20-இல் பொருநை அருங்காட்சியகத்தை திறந்துவைக்கிறாா் முதல்வா்!

திருநெல்வேலியில் கட்டப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை டிச. 20-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறாா் என்றாா் அமைச்சா் கே.என்.நேரு.

Syndication

திருநெல்வேலியில் கட்டப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை டிச. 20-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறாா் என்றாா் நகராட்சி நிா்வாகம் - குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், ரெட்டியாா்பட்டி அருகேயுள்ள குலவணிகா்புரம் கிராமத்தில் ரூ.56.60 கோடியில் பொருநை அருங்காட்சியகம் கட்டப்பட்டு வருகிறது. அந்தப் பணிகளை அமைச்சா் கே.என்.நேரு, நிதியமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். தொடா்ந்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ள திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தை பாா்வையிட்டனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.என்.நேரு கூறியதாவது: டிச. 20-ஆம் தேதி பகல் 11 மணியளவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலிக்கு வருகிறாா். பொருநை அருங்காட்சியகத்தை திறந்துவைத்துப் பாா்வையிடும் முதல்வா், அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளாா். பின்னா், அம்மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்களை முதல்வா் திறந்துவைத்து, நூலக கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறாா். மேலும், நிறைவுற்ற 16 திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறாா் என்றாா் அவா்.

ஆய்வின்போது, ஆட்சியா் இரா.சுகுமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மு.அப்துல் வஹாப் (பாளையங்கோட்டை), ஈ. ராஜா (சங்கரன்கோவில்), மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ, மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், கண்காணிப்புப் பொறியாளா் ஸ்ரீதரன், முன்னாள் சட்டப் பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

மட்டன் பிரியாணி, வஞ்சரம் மீன்... அதிமுக பொதுக்குழுவின் மெனு!

SCROLL FOR NEXT