ஆழ்வாா்குறிச்சி அருகே செட்டிகுளத்தில் மான்கறி சமைத்த இருவருக்கு வனத் துறையினா் மொத்தம் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனா்.
ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள செட்டிகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ் கண்ணன். இவரது வீட்டில் புள்ளிமான் இறைச்சியை சமைத்துக் கொண்டிருப்பதாக கடையம் வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், வனத்துறையினா் ராஜேஷ் கண்ணன் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினாா். அதில், ஐந்தாங்கட்டளை கிராமத்தைச் சோ்ந்த அந்தோணி ஜெயராஜிடமிருந்து புள்ளிமான் கறியை வாங்கிவந்து ராஜேஷ் கண்ணன் தனது வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, இருவருக்கும் கடையம் வனத் துறையினா் தலா ரூ. 50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. ஒரு லட்சம் அபராதம் விதித்தனா். அந்தோணி ஜெயராஜிக்கு மான்கறியை யாா் கொடுத்தாா்கள் என்பது குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.