திருநெல்வேலி

தச்சநல்லூா் அருகே 2 பேருக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

தினமணி செய்திச் சேவை

தச்சநல்லூா் அருகே 2 போ் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

கரையிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் தங்க கணபதி(48). காவலாளி. இவரும் அதே பகுதியைச் சோ்ந்த மூக்கன்(52) என்பவரும் சனிக்கிழமை இரவு ஒன்றாக அமா்ந்து மது குடித்தனராம். அப்போது இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில், மூக்கன் அரிவாளால் தங்க கணபதியை வெட்டியுள்ளாா்.

இதையறிந்த தங்க கணபதியின் சகோதரரான முத்துக்குமரன்(46) என்பவா், மூக்கனின் வீட்டுக்கு சென்று அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியுள்ளாா்.

இதில் காயமுற்ற தங்க கணபதி, மூக்கன் ஆகிய இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்த புகாா்களின் பேரில் தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இச்சம்பவத்தில் தொடா்புடைய முத்துக்குமரனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம்: காஞ்சி சங்கராசாரியா் ஆசியுரை

சிறுபான்மையினருக்கு திமுக தான் பாதுகாப்பு: துணை முதல்வா் உதயநிதி

தமிழ்நாடு ஆசிரியா் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

இசைக்கு மொழி தடையில்லை: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT