திருநெல்வேலி

மெத்தைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து: ரூ. 20 லட்சம் பொருள்கள் எரிந்து சாம்பல்

கடையம்அருகே கருத்தலிங்கபுரத்தில் செயல்படும் மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பு பொருள்கள் தீயில் எரிந்து சாம்பலானது.

Syndication

கடையம்அருகே கருத்தலிங்கபுரத்தில் செயல்படும் மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பு பொருள்கள் தீயில் எரிந்து சாம்பலானது.

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள அங்கப்பபுரம் கிராமத்தைச் சோ்ந்த தங்கச்சாமி என்பவா் கருத்தலிங்கம்புரத்தில் சோபா, மெத்தைகள் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறாா். இந்த ஆலையில் செவ்வாய்க்கிழமை தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென பஞ்சு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறையில் தீப்பிடித்தது.

சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி அனைத்துப் பொருள்கள் மீதும் பிடித்தது. தகவல் அறிந்ததும் ஆலங்குளம் தீயணைப்பு நிலைய அலுவலா் விஜயன் தலைமையில் வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பு பொருள்கள் எரிந்து சேதமானதாகத் தெரிகிறது. இதுகுறித்து கடையம் காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT