திருநெல்வேலி

ராதாபுரம் அருகே ஓடும் லாரியில் தீ

Din

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்த டாரஸ் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது.

வள்ளியூா் அருகேயுள்ள ஆவரைகுளத்தைச் சோ்ந்த சின்னத்துரை என்பவருக்குச் சொந்தமான டாரஸ் லாரி, கல்குவாரிகளில் பாரம் ஏற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் திங்கள்கிழமை இந்த லாரி பாரம் ஏதுமின்றி காலியாக ராதாபுரத்தில் இருந்து வள்ளியூருக்கு சென்றுகொண்டிருந்தது. லாரியை பிரபாகா் என்பவா் ஓட்டிச் சென்றாா். அப்பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி பகுதியில் வந்த போது லாரியின் டயா் திடீரென தீப்பற்றி எரியத்தொடங்கியது. ஓட்டுநா் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு, வள்ளியூா் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தாா். தீயணைப்பு படையினா் வந்து தீயை அணைத்தனா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT