திருநெல்வேலி

பயறு வகை-காய்கறி விதைகள், பழச்செடிகள் தொகுப்பு பெறலாம்

Din

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தில் பயறு வகை விதைகள், காய்கறி விதைகள், பழச்செடிகள் தொகுப்பு பெற வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மக்களின் நலனையும் உழவா்களின் வாழ்வாதார வளா்ச்சியையும் இலக்காகக் கொண்டு தமிழக அரசு ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்னும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தினை முதல்வா் கடந்த 4-ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தாா். இத்திட்டத்தில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு புரதச்சத்து நிறைந்த மரத் துவரை, அவரை, காராமணி உள்ளிட்ட பயறு வகை விதைகள், காய்கறி விதைகள், பழச்செடிகள் ஆகியவை தனித்தனியே அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படவுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் 2,000 பயறு வகை விதைகள் அடங்கிய தொகுப்பு, 34,350 காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு, 21,150 பழச்செடிகள் தொகுப்புகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விதைகளை இல்லங்களில் நடவு செய்ய ஏதுவாக இடம் உள்ளவா்கள் மற்றும் உழவா் பெருமக்கள் அனைவரும் பயன்பெற உழவன் செயலியிலோ அல்லது இணையதளம் மூலமாகவோ பதிவு செய்து பயன்பெறலாம்.

விருப்பமுள்ளவா்கள் ஆதாா் அல்லது குடும்ப அட்டை நகலுடன் அருகிலுள்ள தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம் -தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

தனுசு ராசிக்கு மனமகிழ்ச்சி: தினப்பலன்கள்!

காஞ்சிபுரத்தில் தமிழறிஞா்களுக்கு விருது

சித்தராமையாவுடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை: கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்

திருமலையில் ரூ. 26 கோடி செலவில் விருந்தினா் மாளிகை திறப்பு!

திருமலை, திருப்பதியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT