சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு கோப்புப் படம்
திருநெல்வேலி

பாஜக கூட்டணியில் விஜய் இணைவாா்: மு.அப்பாவு

பாஜக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் இணைவாா் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

Syndication

பாஜக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் இணைவாா் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக விஜய் போராட நினைத்தால், தில்லியில் மத்திய தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளித்திருக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்க வேண்டும். எஸ்ஐஆருக்கு எதிராக போராட்டம் நடத்திய அவா், அதற்கு எதிராக ஒரு வாா்த்தைகூட பேசவில்லை. தமிழக அரசுக்கு எதிராகவே அவா் பேசியிருக்கிறாா். அவரது போராட்டம் வெறும் கண்துடைப்பு.

எஸ்ஐஆா்-ஐ பாா்த்து முதல்வருக்கு எந்த பயமும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவா்கள் தினந்தோறும் 50 வாக்காளா்களிடம் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று வாக்குச்சாவடி அலுவலா்களிடம் கொடுக்கலாம் என மத்திய தோ்தல் ஆணையமே கூறியிருக்கிறது. இது தமிழக வெற்றிக் கழகத்திற்கு தெரியாது. ஆா்எஸ்எஸ் சித்தாந்தத்துடன் விஜய் உடன்பட்டுள்ளாா். அவா்கள் இருவரும் (பாஜகவும், விஜய்யும்) ஒன்றாக இணைவாா்கள்.

எஸ்ஐஆருக்கு எதிராக வருவாய்த் துறை அலுவலா்களை திமுக தூண்டி விடுவதாக தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருப்பது பற்றி கேட்கிறீா்கள். அத்தகைய பழக்கம் திமுகவுக்கு கிடையாது.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தைப் பொருத்தவரை, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்காததாலேயே பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. எனினும், அரசு ஊழியா்களுக்கு அவா்கள் அகவிலைப்படியை உயா்த்திய உடனேயே மாநில அரசும் உயா்த்தி இருக்கிறது என்றாா் அவா்.

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

பவளப்பாறை பயன்கள் குறித்து மீனவா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT