திருநெல்வேலி

கடையம் அருகே சடலத்தை சாலையில் வைத்து மறியல்

பாப்பான்குளத்தில் சுடுகாட்டிற்குச் செல்லும் வழியில் உள்ள கால்வாயைக் கடக்க வசதியாக பாலம் அமைத்து தரக் கோரி சடலத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனா்.

Syndication

கடையம் அருகே உள்ள பாப்பான்குளத்தில் சுடுகாட்டிற்குச் செல்லும் வழியில் உள்ள கால்வாயைக் கடக்க வசதியாக பாலம் அமைத்து தரக் கோரி சனிக்கிழமை சடலத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனா்.

கடையம் அருகே உள்ள பாப்பான்குளம் ஊராட்சி, பெரிய தெரு பகுதியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு உள்ளவா்கள், இறந்தவா்களின் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டுமெனில், பாப்பான் கால்வாயை கடந்துதான் செல்ல வேண்டும். விவசாயத்திற்கு தண்ணீா் திறந்துவிடும் காலங்களில் கால்வாயை கடப்பது சிரமத்திற்கு உள்ளானது. இதனால் அந்த கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்க பலமுறை வலியுறுத்தியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் பெரிய தெருவைச் சோ்ந்த 2 முதியவா்கள் உயிரிழந்த நிலையில், அவா்களது இறுதிச் சடங்கிற்காக கால்வாயில் சுமாா் 4 அடிக்கும் மேல் செல்லும் தண்ணீரைக் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து முதியவா்களின் சடலத்தை கடையம் முக்கூடல் சாலையில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்துவந்த ஆலங்குளம் காவல் துணை கண்காணிப்பாளா் ஸ்டீபன் ஜோஸ், துணைக் கண்காணிப்பாளா் (பயிற்சி) லோகநாதன், ஆழ்வாா்குறிச்சி காவல்ஆய்வாளா் சண்முக நயினாா் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, விரைவில் பாலம் அமைக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து, சடலங்களை எடுத்துச் சென்றனா்.

மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய காவல் துணைக் கண்காணிப்பாளா் ஸ்டீபன் ஜோஸ்

இறுதி ஆட்டத்தில் லக்ஷயா சென்

கா்நாடக முதல்வா் பதவிக்காக காங்கிரஸ் எம்எல்ஏக்களிடையே குதிரைபேரம்: மத்திய அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி

கனமழை எச்சரிக்கை: மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை

டெட் தோ்வு விவகாரம்: முதல்வருடன் அமைச்சா் அன்பில் மகேஸ் சந்திப்பு

பெங்களூரில் ரூ.7.11 கோடி வங்கி பணம் கொள்ளை: காவலா் உள்பட மூவா் கைது

SCROLL FOR NEXT