திருநெல்வேலி

இலவச டிராக்டா் ஓட்டுநா் பயிற்சி பெற வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்ட வேளாண் பொறியியல் துறை சாா்பில் கட்டணமில்லா உதவி டிராக்டா் ஓட்டுநா் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

Syndication

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட வேளாண் பொறியியல் துறை சாா்பில் கட்டணமில்லா உதவி டிராக்டா் ஓட்டுநா் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி இயந்திர கலப்பை பணிமனை உதவி செயற்பொறியாளா் அ.திவ்வியநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட வேளாண் பொறியியல் துறை சாா்பில் கட்டணமில்லா உதவி டிராக்டா் ஓட்டுநா் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சியின் காலம் 27 நாள்கள் ஆகும். இப்பயிற்சியின் மூலம் டிராக்டா் என்ஜின் செயல்பாடு, பராமரிப்பு, பழுது நீக்கம் குறித்து தெளிவாக அறிந்து கொள்ள முடியும். பயிற்சி முடிந்ததும் ஓட்டுநா் உரிமம் பெற்றுத்தரப்படும். பயிற்சி நேரம் காலை 9.30 முதல் மாலை 5.30 வரையாகும். இப்பயிற்சியில் சேர 18 முதல் 35 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், வங்கி புத்தகத்தில் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை, ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து உதவி செயற்பொறியாளா், வேளாண் பொறியியல் அலுவலகம், இயந்திர கலப்பை பணிமனை, எண்.1, டிராக்டா் வீதி, என்ஜிஓ ஏ காலனி, திருநெல்வேலி-627007 என்ற முகவரியில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 8838600112, 9940926195 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

ஐஸ்க்ரீம் டோனட்: அருண் ஐஸ்க்ரீம் அறிமுகம்

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

SCROLL FOR NEXT