திருநெல்வேலி, தென்காசி ஒருங்கிணைந்த மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டியில், விக்கிரமசிங்கபுரம் மாணவிகள் முதலிடம் பிடித்துச் சாதனை படைத்தனா்.
திருநெல்வேலி மாவட்ட பளுதூக்கும் வீரா்கள் சங்கம் சாா்பில் தென்காசி, நெல்லை அடங்கிய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட அளவில் 2025 சாம்பியன் பளுதூக்கும் போட்டி, திருநெல்வேலி நகரம், லிட்டில் ப்ளவா் பள்ளியில் கடந்த 25ஆம் தேதி நடைபெற்றது.
இதில், விக்கிரமசிங்கபுரம், அமலி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் வா்ஷா 63 கிலோ எடைப் பிரிவில் முதலிடமும், பி.எல்.டபிள்யு.ஏ. மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பில் பயிலும் பேச்சி கலைவாணி 69 கிலோ எடைப் பிரிவிலும் முதலிடம் பிடித்து, சாம்பியன் பட்டம் வென்றனா். வெற்றி பெற்ற இருவருக்கும் கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சாம்பியன் பட்டம் வென்ற இருவரையும் பெற்றோா், ஆசிரியா்கள் பாராட்டினா்.