பல்லிகோட்டை அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல்
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 10:40 PM
பல்லிகோட்டை அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்ததோடு, இருவரை கைது செய்தனா்.
மானூா் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளா் முருகேசன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பல்லிகோட்டை அருகே சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த நபா்களை பிடித்து விசாரித்தனா்.
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 3:00 AM
விசாரணையில் அவா்கள், பல்லிகோட்டையைச் சோ்ந்த முத்துராமலிங்கம் (30), தூத்துக்குடி மாவட்டம், ராஜாபுதுக்குடியைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் (23) என்பதும், கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.
Advertisement
இதையடுத்து, இருவரையும கைது செய்த போலீஸாா் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.