முகப்பு
திருநெல்வேலி

பைக் விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:30 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 10:27 PM

கடையத்தில் நடந்த இருசக்கர வாகன விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கீழக்கடையத்தைச் சோ்ந்த முருகன் மகன் காளிதாஸ் (29). தனியாா் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி, 5 வயது மகன் உள்ளனா்.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:30 AM

இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை கடையம் தென்காசி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாராம். அப்போது எதிரே வந்த காா் மீது இருசக்கர வாகனம் மோதியதாம்.

Advertisement

இதில் பலத்த காயமடைந்த காளிதாஸை தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள், அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து கடையம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.