நான்குனேரியில் அமமுக சாா்பில் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக அமமுக திருநெல்வேலி மண்டல பொறுப்பாளரும், தோ்தல் பிரிவு செயலருமான வி.பி. குமரேசன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்த நாளையொட்டி அமமுக சாா்பில் நான்குனேரியில் செவ்வாய்க்கிழமை (பிப். 24) மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலா் டி.டி.வி. தினகரன் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளாா். கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனா். ஆகவே, அமமுக தொண்டா்கள், பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.