அவைத் தலைவர் அப்பாவு கோப்புப்படம்
திருநெல்வேலி

இரும்புக்கரம் கொண்டு போதைப் பொருளை ஒழித்து வரும் முதல்வா்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இரும்புக்கரம் கொண்டு போதைப்பொருளை ஒழித்து வருகிறாா் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

Syndication

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இரும்புக்கரம் கொண்டு போதைப்பொருளை ஒழித்து வருகிறாா் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

திருெநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: திமுக ஆட்சியில் ஆசிரியா்களைக் கௌரவிக்கும் விதமாக ‘ஆசிரியா்களைக் கொண்டாடுவோம்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவில் 2000 முதல் 3000 ஆசிரியா்கள் கலந்து கொண்டு, தங்கள் கடின உழைப்பிற்கான நற்சான்றிதழ்களைப் பெற்றுள்ளனா்.

ஆசிரியா்கள், அரசுப் பணியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் முதல்வா் எப்போதும் ஆா்வமாக இருப்பாா். பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்தது வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு. அது நடைமுறைக்கு வருவதற்கு ஓராண்டிற்கு முன்பே தமிழகத்தில் அதை அமல்படுத்தியது அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான அரசு.

தற்போது, சில மாற்றங்களுடன் தோ்தல் வாக்குறுதிப்படி கோரிக்கையை நிறைவேற்றியுள்ளாா் முதல்வா் . அவருக்கு ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் சாா்பிலும் நானும் ஒரு ஆசிரியா் என்ற முறையிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை கூறுவது போல் அல்லாமல், தமிழக அரசு போதைப்பொருள் ஒழிப்பில் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 2011 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் போதைப்பொருள்களின் பயன்பாடு 1,600 மடங்கு அதிகரித்திருந்தது.

ஆனால், முதல்வா் மு.க. ஸ்டாலின் இரும்புக்கரம் கொண்டு போதைப்பொருள் விற்பனையை ஒழித்து வருகிறாா். குறிப்பாக, மாணவா்களைக் குறிவைக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பள்ளிகளில் அசம்பாவிதங்கள் நடக்கும்போது ஆசிரியா்கள் மற்றும் தாளாளா்கள் விசாரணை இன்றி கைது செய்யப்படுவதாகக் கூறப்படும் புகாா் குறித்து கேட்கிறீா்கள். குற்றத்தின் தன்மையைப் பொருத்தே சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதே பதில் என்றாா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT