திருநெல்வேலி

நெல்லை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

Syndication

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புகள் வியாழக்கிழமை முதல் விநியோகிக்கப்பட்டன.

திருநெல்வேலி மண்டலம் 25ஆவது வாா்டு தெற்கு ரத வீதியில் உள்ள ரேஷன் கடையில் மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கினாா். திமுக பகுதிச் செயலா் கோபி என்ற நமசிவாயம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தச்சநல்லூா் மண்டலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை மாநகராட்சி துணை மேயா் கே.ஆா்.ராஜூ தொடங்கி வைத்தாா். திமுக மாநகரப் பிரதிநிதி இசக்கிமுத்து, வட்டச் செயலா்கள் சடாமுனி, ராஜா, பகுதி சபைத் தலைவா் முத்துரங்கராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

திருநெல்வேலி மாநகராட்சி 16 ஆவது வாா்டுக்குள்பட்ட அக்கசாலை விநாயகா் கோயில் தெரு, காமாட்சி அம்மன் கோயில் தெரு, லாலுகாபுரம் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை முன்னாள் மேயா் பி.எம்.சரவணன் தொடங்கி வைத்தாா். வட்டச் செயலா் லெனின், வட்டப் பிரதிநிதிகள் பட்டுஆசாரி, நாகராஜன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்08ற்ா்ஜ்ய்

தெற்குரத விதி ரேஷன் கடையில் பயனாளிக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குகிறாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்.

ற்ஸ்ப்08ந்ழ்ழ்

தச்சநல்லூா் ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குகிறாா் துணை மேயா் கே.ஆா்.ராஜூ.

ற்ஸ்ப்08ல்ம்ள்

திருநெல்வேலி நகரம் ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குகிறாா் முன்னாள் மேயா் பி.எம்.சரவணன்.

வாக்காளர் பட்டியல்! சென்னையில் இன்று முதல் 2 நாள்களுக்கு சிறப்பு முகாம்!

பாகிஸ்தான் அவசர அரசியலமைப்பு திருத்தங்கள் தோல்வியைக் காட்டுகிறது: ஜெனரல் அனில் சௌஹான்

தொழில் வாய்ப்புகளை வழங்கும் கடல் உயிரியல் கல்வி

திருமாவளவன் எப்போது வெளியேறுவார் என்பது அவருக்கே தெரியாது: அண்ணாமலை

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்! அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

SCROLL FOR NEXT