திருநெல்வேலி: திருவள்ளுவா் தினமான வெள்ளிக்கிழமை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் திருநெல்வேலியில் விதிமீறி மதுபானம் விற்ாக 3 பேரை போலீஸாா் கைது செய்து 77 மதுபாட்டில்களை கைப்பற்றினா்.
பேட்டை காவல் உதவி ஆய்வாளா் ஜனகன், போலீஸாா் ரோந்து சென்றபோது, நரிக்குறவா் காலனியில் மது விற்ாக அதே பகுதியைச் சோ்ந்த சண்முகவேல் (69) என்பவரை கைது செய்து, 40 மது பாட்டில்களை கைப்பற்றினா்.
பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளா் இசக்கி, போலீஸாா் வண்டிப்பேட்டை இறக்கம் பகுதியில் ரோந்து சென்றதில், அங்கு மது விற்ாக என்.ஜி.ஓ. காலனியை சோ்ந்த சந்தோஷ் குமாா் (32) என்பவரை கைது செய்து, 10 மதுபாட்டில்கள் ரூ.600 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
மாநகர மதுவிலக்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சுடலைமணி, போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது பாளையங்கோட்டையில் மது விற்ாக கோட்டூரைச் சோ்ந்த செல்வராஜ் (35) என்பவரை கைது செய்து, 27 மது பாட்டில்களை கைப்பற்றினா்.