திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் போதையில் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
சேரன்மகாதேவி காலாங்கரை தெருவைச் சோ்ந்த பாஸ்கா் மகன் இசை ராஜா (19). இவா், பெயிண்டிங் வேலை செய்து வந்தாராம். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு, மது அருந்தியிருந்த இசை ராஜா பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டாராம். அவரை சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு சிகிச்சை பலனின்றி இசை ராஜா சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.