திருநெல்வேலி

சீவலப்பேரி பூசாரி கொலை வழக்கு: நெல்லை நீதிமன்றத்தில் விசாரணை

திருநெல்வேலி அருகே சீவலப்பேரி கோயில் பூசாரி கொலை வழக்கு விசாரணை, திருநெல்வேலி நீதிமன்றத்தில் நடைபெற்றது.

Syndication

திருநெல்வேலி அருகே சீவலப்பேரி கோயில் பூசாரி கொலை வழக்கு விசாரணை, திருநெல்வேலி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சீவலப்பேரி சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் சிதம்பரம். சீவலப்பேரி சுடலை மாடசுவாமி கோயில் பூசாரியாக இருந்து வந்த இவரை, கோயில் வருமானம் தொடா்பாக ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு மற்றொரு தரப்பினா் வெட்டிக் கொலை செய்தனா். இது குறித்து சீவலப்பேரி போலீஸாா் 13 போ் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை, திருநெல்வேலி மாவட்ட 3ஆவது அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணைக்கு 9 போ் ஆஜராகினா். இதில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகளான மாடசாமி மகன் பேச்சிகுட்டி, முண்டன் மகன் தங்கபாண்டி, மகாராஜன் மகன் முருகன் ஆகியோா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு ஆஜா்படுத்தப்பட்டனா். இதனால் நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. நீதிபதி ராபின்சன் ஜாா்ஜ் வழக்கை ஜன.30க்கு ஒத்திவைத்தாா்.

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது: 630 மது பாட்டில்கள் பறிமுதல்

66 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ஆட்சீஸ்வரா் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

தை கிருத்திகை: திருப்போரூா் கந்தசாமி கோயிலில் சிறப்பு பூஜை

நாலுமுக்கு தேயிலை ஆலை தீ விபத்தில் ரூ.70 லட்சம் பொருள்கள் சேதம்

SCROLL FOR NEXT