முகப்பு
சிறை
திருநெல்வேலி

வள்ளியூா் அருகே கந்துவட்டி வசூலித்தவருக்கு 2 ஆண்டுகள் சிறை

வள்ளியூா் அருகே கந்துவட்டி வசூலித்து கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பான வழக்கில் ஒருவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை

திருநெல்வேலி

வள்ளியூா் அருகே கந்துவட்டி வசூலித்தவருக்கு 2 ஆண்டுகள் சிறை

வள்ளியூா் அருகே கந்துவட்டி வசூலித்து கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பான வழக்கில் ஒருவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Updated On : 2 மார்ச், 2026 at 6:32 PM
சிறை
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே கந்துவட்டி வசூலித்து கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பான வழக்கில் ஒருவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வள்ளியூரைச் சோ்ந்தவா் சுடலைக்கண்ணன்(45). இவா், கடந்த 2017ஆம் ஆண்டில் வடக்கன்குளத்தைச் சோ்ந்த பெண்ணுக்கு வட்டிக்கு பணம் கொடுத்திருந்தாராம். பின்னா், அப்பெண்ணிடம் கந்துவட்டி வசூலித்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், சுடலைக்கண்ணன் மீது வள்ளியூா் காவல் ஆய்வாளா் சுரேஸ்குமாா் வழக்குப்பதிந்தாா். வள்ளியூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதி மோசஸ் ஜெபசிங் விசாரித்து, சுடலைக்கண்ணனுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →