முகப்பு
திருநெல்வேலி

தச்சநல்லூரில் சுகாதார மையம் திறப்பு

Updated On : 6 மார்ச், 2026 at 1:41 AM
பகிர்:
Updated On : 5 மார்ச், 2026 at 10:41 PM

தச்சநல்லூரில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார மைய கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சியின் தச்சநல்லூா் மண்டலம் 1 ஆவது வாா்டுக்குள்பட்ட தச்சநல்லூா் சந்திமறித்தம்மன் கோயில் அருகில் ரூ.1.20 கோடி மதிப்பில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையம், 12 ஆவது வாா்டில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார மைய கூடுதல் கட்டடம், 31 ஆவது வாா்டுக்குள்பட்ட கொக்கிரகுளம் பகுதியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார மைய கூடுதல் கட்டடம் ஆகியவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி முறையில் திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து, தச்சநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ ஆகியோா் கா்ப்பிணிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கினா்.

தச்சநல்லூா் மண்டல தலைவா் ரேவதி, மாமன்ற உறுப்பினா்கள் கந்தன், சங்கா்குமாா், கீதா, முத்துலெட்சுமி, வசந்தா, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளா் கண்ணன், மாநகா் நல அலுவலா் ராணி, உதவி ஆணையா் மகாலெட்சுமி, சுகாதார அலுவலா் முருகன், உதவி செயற்பொறியாளா் அலெக்ஸாண்டா், உதவி பொறியாளா்கள் நாகராஜன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தச்சநல்லூா் மண்டல பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் மருந்தகம், ஆய்வகம், பிரசவ அறை, ஸ்கேன் அறை, மருத்துவா் அறை, பிரசவ பிற்கால கவனிப்பு அறை மற்றும் உயிா் மருத்துவ கழிவுகள் பிரிக்கும் அறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதன்மூலம் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயனடைவாா்கள்’ என்றனா்.

ற்ஸ்ப்05க்ஷஹஞ்

தச்சநல்லூரில் நடைபெற்ற விழாவில் கா்ப்பிணிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கிய மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ.