கன்னியாகுமரி

ரயில்வே பணியிடங்களில் முன்னாள் படைவீரர்களுக்கு இடஒதுக்கீடு

தினமணி

நாகர்கோவில், ஏப். 13: சென்னை மற்றும் திருவனந்தபுரம் ஒருங்கிணைந்த ரயில்வே கோட்டங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆள்கள் தேர்வில் முன்னாள் படைவீரர்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நாகர்கோவில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் எஸ். ஜெயகர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இப் பணிகளில் சேர தகுதியும் விருப்பமும் உள்ள முன்னாள் படைவீரர்கள் இம் மாதம் 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகலாம். மேலும், முன்னாள் படைவீரர்கள் தங்கள் ஆவணக் காப்பகம் மூலமாக குடும்பத்தினர்களான மனைவி, குழந்தையின் பெயர், பிறப்பு, திருமணம், மறுமணம், விவாகரத்து போன்ற நிகழ்வுகளைப் பதிவு செய்வதற்கான காலஅவகாசம் வரும் 31.8.09 வரை நீட்டித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை பதிவு செய்யாமலிருக்கும் முன்னாள் படை வீரர்கள், மேலும் தாமதிக்காமல் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT