கன்னியாகுமரி

நாகர்கோவிலில் மது அடிமைகள் மறுவாழ்வு விரிவாக்க மையம் திறப்பு

நாகர்கோவிலில் மது அடிமைகள் மறுவாழ்வு விரிவாக்க மையத் திறப்பு விழா நடைபெற்றது.மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்துவரும், மண்டைக்காடு ஏ.எம்.கே. சேவை

தினமணி

நாகர்கோவிலில் மது அடிமைகள் மறுவாழ்வு விரிவாக்க மையத் திறப்பு விழா நடைபெற்றது.

மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்துவரும், மண்டைக்காடு ஏ.எம்.கே. சேவை நிறுவனம், அதன் விரிவாக்க மையத்தை நாகர்கோவில் சற்குணவீதி, கிராஸ் தெருவில் தொடங்கி உள்ளது.

நிகழ்ச்சிக்கு, அதன் நிறுவனர்- தலைவர் புலவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். மனநல மருத்துவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். சுவாமி பத்மேந்திரா, மரிய வின்சென்ட் அடிகள், ஷாகுல் அமீது ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.

மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மதுசூதனன், மறுவாழ்வு மையத்தை குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்புத் தலைவர் கிப்சன் சாமுவேல் ராஜன், செயலர் ராஜேந்திரன், பொருளாளர் டேனியல் ராஜன், ரெட்சன் இயக்குநர் உஷா, மறுவாழ்வு மைய திட்ட இயக்குநர் புஷ்பவதி, ஆலோசகர்கள் சுசீலா, தனலட்சுமி, ராதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இயக்குநர் அருள்கண்ணன், மையத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார். இயக்குநர் அருள்ஜோதி வரவேற்றார். செயலர் ரீத்தாமேரி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT