கன்னியாகுமரி

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டம்

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியது; எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா, கன்னியாகுமரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி , பல்வேறு துறைகளின் வாயிலாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பிக்கவுள்ளார். மேலும், மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி அளவில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப்போட்டி, நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கவுள்ளார்.
எனவே, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளி அளவிலும், இணை இயக்குநர் (கல்லூரி கல்வி), கல்லூரி அளவிலும், மேற்கண்ட போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்ற மாணவ, மாணவியரின் பெயர்ப் பட்டியலையும், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நலத்துறை அலுவலர், மாரத்தான் போன்ற போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களின் விவரத்தினையும், மாவட்ட நிர்வாகத்திற்கு அளிப்பதோடு, தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நடைபெறுவதை, பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வாகன அணி வகுப்பினை, நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடத்திட வேண்டும். எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவினை, இம் மாவட்டத்தில் சிறப்பான முறையில் நடத்திட, அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் தங்களது முழு ஒத்துழைப்பினை, மாவட்ட நிர்வாகத்திற்கு அளிக்க வேண்டும் என்றார் அவர். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சோ.இளங்கோ, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ராஹுல்நாத், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதா பானு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT