கன்னியாகுமரி

தூத்தூர் கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சேவை

DIN

தூத்தூர் மீனவக் கிராமத்தின் முக்கிய பகுதிகளில் சுத்திகரிப்பு இயந்திரங்களை  நிறுவி, சுகாதாரமான குடிநீர் சேவை செய்கின்றனர்  நேதாஜி படிப்பகத்தினர்.
இரயுமன்துறை பகுதியில் கடலில் கலக்கும் தாமிரவருணி ஆற்றில், கடந்த சில மாதங்களாக தண்ணீர் வரத்து குறைந்ததையடுத்து,  கடல்நீர் ஆற்றுநீரில் கலந்துள்ளது. இதன் காரணமாக உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலமாக விநியோகிக்கப்பட்டு வரும் குடிநீர், உவர்ப்பு தன்மையுடையதாகவும்,  சுகாதாரமற்ற முறையிலும் உள்ளது.  
இந்நிலையில் தூத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பகுதி,  பேருந்து நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதி என மொத்தம் 4 இடங்களில் நேதாஜி படிப்பக நிர்வாகிகள் முயற்சியால் முதல்கட்டமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  "நேதாஜி ஹப்'  என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்  உள்ளிட்ட வசதிகள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
நேதாஜி படிப்பக நிர்வாகிகள், தன்னார்வலர்கள் கூட்டு முயற்சியுடன்  இச்சேவையை செய்து வருகின்றனர்.  குடிநீர் இயந்திரங்களில் நிரப்பப்படும் தண்ணீர் மற்றும் அதற்கான மின்வசதி ஆகியன அந்தந்தப் பகுதி தன்னார்வலர்களின் வீடுகளிலிருந்து பெறப்படுகிறது.  இந்த வசதியை  பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர் என  படிப்பகத்தின் செயலர் பைஜூ தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT