கன்னியாகுமரி

குமரி மீனவர் போராட்டத்தை திசைதிருப்ப முயன்றதாக  வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 7 பேர் கைது

DIN

ஒக்கி புயலில் சிக்கி கடலில் மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி,  கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் நடத்திவரும் தொடர் போராட்டங்களைத் திசைதிருப்ப முயன்றதாக சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஒக்கி புயலில் மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி, தூத்தூர் கடலோர மண்டலத்துக்கு உள்பட்ட மீனவக் கிராமங்களில் தொடர் போராட்டங்களில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள், அமைப்புகள் ஆதரவு அளித்து வருகின்றன. 
இந்நிலையில், போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மீனவ மக்களை மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக திசைதிருப்பி அரசுக்கு அவப்பெயர், வன்முறை, கலவரங்களை ஏற்படுத்தும் நோக்கில் சில அமைப்பினர் ஈடுபட்டுள்ளதாக போலீஸாருக்கு பல்வேறு தகவல்கள் வந்தனவாம். இதன் அடிப்படையில், போலீஸார் விசாரித்துவந்தனர்.
இந்நிலையில், கொல்லங்கோடு கண்ணநாகம் சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தேகத்துகிடமாக நின்றிருந்த 7 இளைஞர்களைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். இதில்,  அவர்கள்  வெளிமாவட்டங்களைச் சேர்ந்த "மக்கள் அதிகாரம்' என்ற அமைப்பைச் சேர்ந்தோர் என்பதும்,  கொல்லங்கோடு அருகே மேடவிளாகம்,  பனவிளை பகுதியைச் சேர்ந்த ரா. கெஜின்குமார் (43) என்பவரின் வீட்டில் தங்கியிருந்து,  மீனவர்களைத் தூண்டி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டுவந்ததும் தெரியவந்தது.
அவர்கள்,  சென்னை அசோக்நகர் நாராயணன் மகன் மருது (33), தூத்துக்குடி, சங்கரலிங்கநகர் மாடசாமி மகன் கணேசன் (35), மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினர் கடையநல்லூர், நடுஅய்யனார் தெரு கலீல் ரகுமான் மகன் முகமது அனஸ் (20),  அதன் திருநெல்வேலி மண்டல ஒருங்கிணைப்பாளர் கோவில்பட்டி மில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் ஆதி (37), பாளையங்கோட்டை, ஆரோக்கியநாதபுரம் அமல்ராஜ் மகன் கிங்சன் (23), அமைப்பின் உறுப்பினர்கள் கோவில்பட்டி, கூசாலிபட்டி வடக்குத் தெரு முருகன் மகன் மாரிமுத்து, திருநெல்வேலி கேடிசி நகர் கிருஷ்ணசாமி மகன் அன்பு (32) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து மருது உள்பட 7 பேரையும் கொல்லங்கோடு போலீஸார் கைது செய்து, குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

ஆதி சக்தி!

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

சித்திரைத் திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு சென்றடைந்த கள்ளழகர்!

கலால் முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் பதில்மனு!

SCROLL FOR NEXT