கன்னியாகுமரி

நாகர்கோவிலில் ஓய்வூதியர்கள் நூதனப் போராட்டம்

DIN

நாகர்கோவிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் 11ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நூதனப் போராட்டம் நடத்தினர்.
அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சங்கம் சார்பில், ஓய்வூதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும், பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் ராணித்தோட்டம் பணிமனை முன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
11ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் காதுகளில் பூ வைத்து தங்களுக்கு ஓய்வூதியம் வழங்காமல் ஏமாற்றுவதாக குற்றம்சாட்டி கோஷம் எழுப்பினர்.  இப்போராட்டத்துக்கு சங்கத் தலைவர் குட்டப்பன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பால்ராஜ், செயலர் சுந்தர்ராஜ், பொருளாளர் செல்வராஜாசிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT