கன்னியாகுமரி

சுசீந்திரம் அருகே அம்மன் கோயிலில் திருட்டு

சுசீந்திரம் அருகே முத்தாரம்மன் கோயில் பூட்டை உடைத்து நகையைத் திருடிய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

DIN

சுசீந்திரம் அருகே முத்தாரம்மன் கோயில் பூட்டை உடைத்து நகையைத் திருடிய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சுசீந்திரத்தை அடுத்த வீரபாகுபதியில் முத்தாரம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை புதன்கிழமை காலை பூசாரி திறக்க வந்த போது கோயில் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். இது குறித்து, கோயில் நிர்வாகிகள் அளித்த தகவலின்பேரில், சுசீந்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பரத்லிங்கம் மற்றும் போலீஸார் கோயில் உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் கிடந்த நகை மற்றும் பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த நகை ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு 8 பவுன் ஆகும். இது குறித்து சுசீந்திரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெகு விமர்சையாக நடைபெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

SCROLL FOR NEXT