கன்னியாகுமரி

மீன்வளத்துறை அதிகாரியைக் கண்டித்து குமரியில் நாளை உண்ணாவிரதம்

மீன்வளத்துறை அதிகாரியைக் கண்டித்து கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை (மே 19) உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் என்றார் ஆஸ்டின் எம்எல்ஏ.

DIN

மீன்வளத்துறை அதிகாரியைக் கண்டித்து கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை (மே 19) உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் என்றார் ஆஸ்டின் எம்எல்ஏ.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கன்னியாகுமரி பேரூராட்சி, சின்னமுட்டம் கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மீன், காய்கறி விற்பனைக்கூடம் மற்றும் மீனவர் ஓய்வுக் கூடம் கட்டுவதற்கு ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு ஆட்சியரின் நிர்வாக அனுமதி பெற்று பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஒப்பந்தப்புள்ளி ஏலம் விடப்பட்டு பணியும் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணியை செய்யவிடாமல் மீன்வளத்துறை உதவி இயக்குநர் இடையூறு விளைவிக்கிறார். பேரூராட்சி மூலம் மேற்கொள்ளப்படும் பணியை தடுத்து, அந்த கட்டடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முயற்சிக்கிறார். இக்கட்டடம் மீன்வளத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் சென்றால் மீனவர்களின் பயன்பாட்டுக்கு வராது. எனவே, மீன்வளத்துறை உதவி இயக்குநரின் செயல்பாட்டை கண்டித்து, கன்னியாகுமரியில் மே 19ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT