கன்னியாகுமரி

குலசேகரம் அருகே விதிமுறை மீறி அதிக பாரம்: 6 லாரிகள் பறிமுதல்

DIN

குமரி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு விதிறை மீறி அதிக பாரம் ஏற்றிச் சென்ற  6 லாரிகளை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
குமரி மாவட்டம் சுருளகோடு, வலியாற்றுமுகம், சித்திரங்கோடு உள்ளிட்ட இடங்களிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் ஜல்லி, பாறைத்துகள் உள்ளிட்டவை கேரளத்துக்கு அதிக பாரத்துடன் கனரக லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.  
 இத்தகைய லாரிகளை பறிமுதல் செய்யும் பொருட்டு,  மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள் குலசேகரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில்  வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது,  அவ்வழியாக அதிக பாரத்துடன் வந்த 6 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து கோழிப்போர்விளை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டுசென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT