கன்னியாகுமரி

கருங்கல் பகுதியில் தரமற்ற உணவுப் பொருள்கள் விற்கப்படுவதாக புகார்

DIN

கருங்கல் பகுதியில் உள்ள கடைகளில் தரமற்ற உணவுப் பொருள்கள் விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கருங்கல் பகுதியில் உள்ள பேக்கரி, ஹோட்டல்கள் போன்றவற்றில் எப்போதும் கூட்டம் அதிகரித்து காணப்படும். அண்மைக்காலமாக இவற்றில் கெட்டுப்போன உணவுப் பொருள்கள் விற்கப்படுவதாகவும்,  இதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடும் அவதிக்குள்ளாவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.                
இதுகுறித்து சமூக ஆர்வலர் எட்வின்குமார் கூறியது: கருங்கல் பகுதியில் உள்ள சில ஹோட்டல்களில் கெட்டுப்போன உணவுப் பொருள்களையும் கூட வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.  இதை தடுக்கும் வகையில்,  கிள்ளியூர் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் இப்பகுதியில் உள்ள ஹோட்டல்களில் தொடர்ந்து ஆய்வுமேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT