கன்னியாகுமரி

4 இடங்களில் இன்று அம்மா திட்ட சிறப்பு முகாம்

DIN

குமரி  மாவட்டத்தின் 4 வட்டங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம்கள்   வெள்ளிக்கிழமை(அக்.13)நடைபெறுகிறது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  அகஸ்தீஸ்வரம் வட்டத்தில், அஞ்சுகிராமம் வருவாய் கிராமத்திற்கு வாரியூர் அரசு தொடக்கப்பள்ளியிலும், தோவாளை வட்டத்தில் குமாரபுரம் வருவாய் கிராமத்திற்கு குமாரபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், கல்குளம் வட்டத்தில் பேச்சிப்பாறை வருவாய் கிராமத்திற்கு பேச்சிப்பாறை அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியிலும், விளவங்கோடு வட்டத்தில் கீழ் மிடாலம் ஏ வருவாய் கிராமத்திற்கு ஆலஞ்சி புனித பிரான்சிஸ் சேவியர் நடுநிலைப்பள்ளியிலும் அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் அக். 13 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. முகாமில் அப்பகுதி மக்கள் பங்கேற்று அடிப்படை வசதி மற்றும் பொதுவான மனுக்களை அளித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT