ஆற்றில் குளிக்க சென்றவர் மயங்கி விழுந்து சாவு
குழித்துறை அருகே ஆற்றில் குளிக்கச் சென்றவருக்கு திடீரென வாந்தி- மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தார்.
குழித்துறை அருகே ஆற்றில் குளிக்கச் சென்றவருக்கு திடீரென வாந்தி- மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தார்.
குழித்துறை பெருந்தெரு பகுதியைச் சேர்ந்த சுகுமாரன்நாயர் மகன் வாமதேவன்நாயர் (56). இவர் உடல் நலம் பாதிக்கப்படிருந்தாராம். இந்நிலையில் புதன்கிழமை மாலை குழித்துறை சிவன்கோயில் அருகிலுள்ள தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்றாராம். அவர் கரையில் நின்றிருந்தபோது திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து களியக்காவிளை போலீஸார் விசாரித்துவருகின்றனர்.