கன்னியாகுமரி

கொட்டாரத்தில் கலையரங்கம் திறப்பு

DIN

கொட்டாரம் பேரூராட்சி 14-ஆவது வார்டுக்கு உள்பட்ட ராமச்சந்திரா நகரில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 3 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தை எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ.  திறந்தார்.
இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று  கட்டப்பட்ட இக் கலையரங்க  திறப்பு விழா நிகழ்வுக்கு பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் எஸ்.வைகுண்டபெருமாள் தலைமை வகித்தார்.  ரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர் என்.தாமரைபாரதி, எம்.பரமார்த்தலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ.  கலையரங்கத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் கே.முத்துசுவாமி, எஸ்.சாய்ராம், பி.பாபு, த.இளங்கோ, ஜி.முத்து, ஐயப்பன், பிரேம் ஆனந்த், மதி, பால்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT