கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே சாலையோரம் கிடந்த பட்டாசுகள் பறிமுதல்

DIN

களியக்காவிளை அருகே சாலையோரம் பாலித்தீன் பையில் கேட்பாரற்று கிடந்த பட்டாசுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
களியக்காவிளை காவல் ஆய்வாளர் ஜமால் தலைமையிலான போலீஸார் வெள்ளிக்கிழமை மாலையில் களியக்காவிளை சந்திப்பு அருகில் கேரள எல்லையோரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் பூட்டியிருந்த ஒரு கடையின் முன் பாலித்தீன் கவரில் சுற்றப்பட்டு மர்ம பொருள் கிடந்தது தெரிந்தது. போலீஸார் பாலித்தீன் பையிலிருந்த பொருளை எடுத்து பார்த்தபோது அவை சணல் நூலால் சுற்றப்பட்டு, நாட்டு வெடி குண்டுகள் போன்று காணப்பட்டது. அவற்றை போலீஸார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவற்றில் வெடி குண்டுகளுக்கான எந்த தடயங்களும் இல்லை என்றும் அவை பட்டாசுகள் எனவும் போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT