முகப்பு
கன்னியாகுமரி

நாகர்கோவிலில் காங்கிரஸார் உண்ணாவிரதம்

தேசிய வங்கிகளில் முறைகேட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில்  உண்ணாவிரதப் போராட்டம்  நாகர்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது. 

Updated On : 10 ஏப்ரல், 2018 at 4:52 AM
பகிர்:

தேசிய வங்கிகளில் முறைகேட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில்  உண்ணாவிரதப் போராட்டம்  நாகர்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் வடசேரி அண்ணா விளையாட்டு மைதானம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  பிரின்ஸ் எம்எல்ஏ, மாவட்ட எஸ்.சி.எஸ்.டி. பிரிவுத் தலைவர் சுந்தர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தேசிய வங்கிகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளை தடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும்,  எஸ்.சி. எஸ்.டி. சட்டத்தை நீர்த்துப் போகச்செய்யும் நடவடிக்கைகளை கண்டித்தும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்டப் பொருளாளர் யூசுப்கான்,  நிர்வாகி மகேஷ்லாசர், மகளிர் அணி தலைவி தங்கம் நடேசன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பாபுஆன்டனி,  பொறியாளர் அலெக்ஸ், வட்டாரத் தலைவர் காலபெருமாள்,  உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.