கதுவா சம்பவம்: நாகர்கோவிலில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
கதுவா சம்பவத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த 8 வயது சிறுமி ஆஷிபாவுக்கு, நாகர்கோவிலில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கதுவா சம்பவத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த 8 வயது சிறுமி ஆஷிபாவுக்கு, நாகர்கோவிலில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
குமரி மாவட்ட தொழிற்சங்க மையத்தின் சார்பில், வெட்டூர்ணிமடம் நாகம்மாள் ஆலை முன் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, சிஐடியூ மாவட்ட துணைத் தலைவர் பி.சுகுமாரன் தலைமை வகித்தார். இதில், நகர ஒருங்கிணைப்புக்குழு அந்தோணி, உழைக்கும் பெண்கள் அமைப்பாளர் இந்திரா, சிஐடியூ மாவட்டச் செயலர் தங்கமோகன், நிர்வாகிகள் சந்திரபோஸ், சித்ரா, ராஜ்குமார், லட்சுமணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் மோகன், அஸீஸ், முகமதுஉசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.