சிறுமிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியருக்கு 2 ஆண்டு சிறை
நாகர்கோவிலில் பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு 2 ஆண்டுகள்
நாகர்கோவிலில் பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள பெருவிளை வசந்தம்நகரைச் சேர்ந்தவர் சுப்பையன் (49). இவர் ஆரல்வாய்மொழியை அடுத்த சீதப்பால் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சுப்பையன் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பள்ளியில் பயிலும் சிறுமிகளுக்கு தனது செல்லிடப்பேசியில் இருந்து ஆபாச படங்களை காட்டி அவர்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தாராம்.
இதுகுறித்து, ஒரு சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிந்து சுப்பையனை கடந்த 2016இல் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜான். ஆர்.டி.சந்தோஷம், குற்றம்சாட்டப்பட்ட தலைமை ஆசிரியர் சுப்பையனுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.