தக்கலை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த மாணவர் சாவு
தக்கலை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்த மாணவர் உயிரிழந்தார்.
தக்கலை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்த மாணவர் உயிரிழந்தார்.
தக்கலையை அடுத்த அழகியமண்டபம் பகுதியைச் சேர்ந்த அகமதுகபீர் மகன் சாதிக் (16). இவர் தக்கலை அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். சாதிக் தனது நண்பருடன் அழகியமண்டபத்திலிருந்து குளச்சலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு திங்கள்கிழமை மாலை ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.
திருவிதாங்கோடு கிறிஸ்தவ ஆலயம் அருகே வந்தபோது சாலையில் இருந்த வேகத்தடையை கவனிக்காததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்டு சாதிக்கும் அவரது நண்பரும் பலத்த காயமடைந்தனர்.
சாதிக் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார். இது குறித்து தக்கலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.