முகப்பு
கன்னியாகுமரி

தோவாளை கிருஷ்ணசுவாமி கோயில் புதிய அன்னதான மண்டபம் திறக்கப்படுமா?

தோவாளையில் உள்ள கிருஷ்ணசுவாமி திருக்கோயில் அன்னதான மண்டபம் கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Updated On : 19 ஏப்ரல் 2018, 1:39 am IST
பகிர்:

தோவாளையில் உள்ள கிருஷ்ணசுவாமி திருக்கோயில் அன்னதான மண்டபம் கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான திருக்கோயில்களில் அன்னதான திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் தோவாளையில் உள்ள அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயிலிலும் அன்னதானம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.  ஆனால் பக்தர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கான அன்னதான மண்டபம் இல்லாத நிலையில், தமிழக அரசால் 2016 ஆண்டு ரூ. 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு. கோயில் அருகே பணி தொடங்கப்பட்டது. இப்பணியானது முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அன்னதான மண்டபம் திறக்கப்படாமல், கோயிலுக்கு வரும் பக்தர்கள் திறந்தவெளியில் அமர்ந்து சாப்பிடும் நிலை உள்ளது.  எனவே இந்துஅறநிலையத் துறை அதிகாரிகள் இம்மண்டபத்தை உடனே திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.