பேச்சிப்பாறை அணை புனரமைப்பு பணியைப் பார்வையிட்ட விவசாயிகள்
பேச்சிப்பாறை அணையில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் புதன்கிழமை பார்வையிட்டனர்.
பேச்சிப்பாறை அணையில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் புதன்கிழமை பார்வையிட்டனர்.
குமரி மாவட்டத்தின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாகத் திகழும் பேச்சிப்பாறை அணையில் ரூ. 61.30 கோடி மதிப்பில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் ஆர்.ரவி, மாநிலக் குழு உறுப்பினர் ஜெ.சைமன் சைலஸ், மாவட்டப் பொருளாளர் சதீஷ், மாவட்டக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம் பிள்ளை ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு உதவிப் பொறியாளர்கள் லூயிஸ் அருள் செழியன், எட்வின் ஆகியோரிடம் விவரங்களை கேட்டறிந்தனர்.