இலவச கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம்: மே 3 ல் வீரர்கள் தேர்வு
குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள இலவச கோடைகால கைப்பந்து பயிற்சி முகாமுக்கான வீரர்கள் தேர்வு வியாழக்கிழமை (மே 3) நடைபெறுகிறது.
குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள இலவச கோடைகால கைப்பந்து பயிற்சி முகாமுக்கான வீரர்கள் தேர்வு வியாழக்கிழமை (மே 3) நடைபெறுகிறது.
இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட கைப்பந்து கழகச் செயலர் ஆர். ரத்தினபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைசிறந்த கைப்பந்து விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்காக 14 வயதுக்குள்பட்ட சிறந்த வீரர்களைத் தேர்வு செய்து கைப்பந்து பயிற்சி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கோடை கால பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்கான தேர்வு, நாகர்கோவில் கல்கோவில் அருகில் உள்ள கைப்பந்து மைதானத்தில் மே 3 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும். இதில் 25 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மே 5ஆம் தேதி முதல் தினமும் காலை 6.30 மணி முதல் 8.30 மணிவரை தொடர்ந்து 20 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும். அகில இந்திய விளையாட்டு வீரர் ஜி. முத்துராஜ், உடல்கல்வி ஆசிரியர் மணிராஜ் ஆகியோர் பயிற்சி வழங்குவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.