கன்னியாகுமரி

சூறைக்காற்றுடன் மழை: மார்த்தாண்டம் அருகே தென்னை மரம் முறிந்து மின்கம்பியில் விழுந்தது; போக்குவரத்து பாதிப்பு

DIN

களியக்காவிளை, மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலையில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதையடுத்து மார்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியில் தென்னை மரம் முறிந்து மின்கம்பி மீது விழுந்ததில் அப்பகுதி வழியாக 3 மணி நேரம் வாகன போக்குவரத்து தடைபட்டது.
மார்த்தாண்டம் மேம்பாலம் பணிகள் காரணமாக நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அரசுப் பேருந்துகள், கனரக லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் இரவிபுதூர்கடை பகுதியிலிருந்து திரும்பி மாமூட்டுக்கடை, விரிகோடு, மார்த்தாண்டம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. 
இந்த நிலையில் அதிகாலை 4.30 மணியளவில் விரிகோடு சந்திப்பு அருகே சாலையோரம் நின்ற தென்னைமரம் முறிந்து அருகிலுள்ள மின்கம்பி மீது விழுந்தது. இதையடுத்து அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டதுடன், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நின்றன. 
இதைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் வந்து தென்னை மரத்தை வெட்டி அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து நடத்துநா் தீக்குளிக்க முயற்சி

கிணறு வெட்டும் போது மண் சரிந்து தொழிலாளி பலி

‘இ-பாஸ்’ சந்தேகங்களுக்கு தீா்வு காண தொலைபேசி எண் அறிவிப்பு

ரயிலில் அடிபட்டு வேன் ஓட்டுநா் பலி

சாலை விபத்தில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT