கன்னியாகுமரி

செண்பகராமன்புதூரில் வீட்டின் முன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு

DIN

செண்பகராமன்புதூரில் வீட்டின் முன் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கிய மலைப்பாம்பை வனத்துறையினர் புதன்கிழமை மீட்டனர்.
செண்பகராமன்புதூர் கட்டளை குளம் அருகேயுள்ள மீனாட்சி சுந்தரம் என்பவர் வீட்டின் முன் ஒரு ஓடை செல்கிறது. இந்த ஓடையில் இருந்து விஷ பூச்சிகள் வராமல் இருப்பதற்காக அவருடைய வீட்டின் முன்பு பாதுகாப்புக்காக வலை அமைத்திருந்தார்.
இந்நிலையில், புதன்கிழமை காலை அந்த வலையில் சுமார் 6 அடி நீளமுள்ள ஒரு மலைப்பாம்பு சிக்கி இருந்தது. அதைப் பார்த்த  அவர், முன்னாள் ஊராட்சித் தலைவர் கல்யாணசுந்தரம் மூலம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த வனஊழியர்கள்,  மலைப்பாம்பை மீட்டு பொய்கை அணை பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் விட்டனர் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT