கன்னியாகுமரி

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கும்

DIN

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கும் என்றார் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு.
கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோவாளை ஒன்றிய அதிமுக  செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழர் நலன் பாதிக்கும் வகையில் மேக்கேதாட்டு மட்டுமல்ல எந்த இடத்தில் அணை கட்டினாலும் நாங்கள் எதிர்ப்போம். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகம் ஏற்றுக்கொண்டால்தான் காவிரியின் குறுக்கே அணை கட்டமுடியும் என்ற விதி உள்ளது.தமிழர்களின் நலனுக்கு எதிராக கர்நாடகம் செயல்படக் கூடாது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், தமிழக பாஜக தலைவர்  தமிழிசையும் கூறியுள்ளனர். மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு சாதகமான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்கும்.
கஜா புயல் நிவாரணம் இன்னும் முழுமையாக அறிவிக்கப்படவில்லை. மத்திய அரசு முதல்கட்டமாக நிதி அறிவித்துள்ளது. மத்திய குழு ஆய்வு செய்த அறிக்கையை சமர்ப்பித்த பிறகு நிதி வழங்குவர். புயலால் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளோம்.
அதிமுகவும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் இணைந்தால்தான் திமுகவை எதிர்கொள்ள முடியும் என்று தங்கத்தமிழ்ச்செல்வன் கூறியிருக்கிறார். அது அவரது சொந்தக் கருத்து என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT